துருக்கி சென்று காணாமல் போன சவூதி அரேபிய பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் ,வோஷிங்டன் போஸ்ட்
சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான ஜமால் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றநிலையில் காணாமல் போயிருந்தார்.
முதல் கட்ட விசாரணைகளில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக பிபிசி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதனை மறுத்துள்ள சவூதி அரேபியா, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளது.
இந்தநிலையில் ஜமால் கொல்லப்பட்டிருப்பது உண்மை என்றால், அது மிகவும் கொடூரமான மற்றும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியாத செயலாக இருக்கும் என வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. துருக்கி ஆளும் கட்சியான ஏ.கே கட்சியின் துணை தலைவர் ஜமால் கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ள போதும் இது தொடர்பாக எந்த ஆதாரமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது