327
திருமறை கலாமன்றத்தின் மூத்த கலைஞரும் ஈழத்தின் அரங்க புலத்தில் அரைநூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவருமான ஜி. பி. பேர்மினஸ் இன்று காலமானார். அமரர் ஜி.பி.பேர்மினஸ் அறுபது ஆண்டுகளுக்கு மேல் அரங்கப் பணியாற்றியவர். சிறந்த நடிகர், நெறியாளர், தயாரிப்பாளர், வேட உடை விதானிப்பாளர், அரங்கப் பயிற்றுனர், திருமறை கலாமன்றத்தின் தாபக உறுப்பினர் என பன்முகப் பணிகளைப் புரிந்த இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திருமறை கலாமன்றத்தில் கலைச்சேவை ஆற்றியுள்ளார்.
அறுபது நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் நாடக அரங்ககல்லூரி உட்பட பல அரங்கநிறுவனஙகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல நாடகங்களை இயக்கியுள்ளார். திருப்பாடுகளின்காட்சி போன்ற நாடங்களை நெறிப்படுத்திய இவர்.ஒரு தீவிர அரங்க விசுவாசியாக தனது கலைப் பயணத்தை ஆற்றியுள்ளார்.
Spread the love