பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை இத்தாலியில் அதிகரித்துவருகின்றன. இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி இன்று 1 சதவீதத்துக்கும் குறைவாக காணப்படுகின்றது. வர்த்தக்கத்தில் ஏற்றுமதி குறைவாகக் காணப்படுவதுடன் இறக்குமதி அதிகமாக காணப்படுவதனால் வேலையில்லாப் பிரச்சினை உச்சமடைந்துள்ளது.
பொது நாணயமான யூரோ மீது அதிருப்தி காணப்படுவதனாலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளில் காணப்படும் வெறுப்பினாலும் அதிலிருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.பழையபடி தங்களுக்கென்று தனி நாணயப் புழக்கத்தினைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
சமூக நலத் திட்டங்களுக்கும் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளுக்கும் அதிக நிதியைச் செலவிட விரும்புகின்ற புதிய கூட்டணி அரசு அதனைக் கடன் பத்திர வெளியீட்டு மூலம் திரட்டவும் முனைகிறது. எனினும் உரிய காலத்தில் முதலையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமல்போனால் நாடே திவாலாகிப் போய் விடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை இத்தாலியில் அதிகரித்துவருகின்றது.