இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை இதுவரை எட்டுப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற நான்காம் நாள் போட்டியின் போது இலங்கை மூன்று பதக்கங்களைப் பெற்றிருந்தது. நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் இலங்கை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அந்தவகையில் அமில பிரசன்ன முதலாம் இடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தையும், உபுல் இந்திக்க இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தையும் சுரங்க கீர்த்தி மூன்றம் இடத்தையும் கைப்பற்றியிருந்தமை வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.