சமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் ஹொலிவூட் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ‘மீ ரூ’ என்ற பெயரில் ஹாஷ் ரக் செய்து ருவிட்டரில் பதிவிட்டதனையடுத்து இந்தியாவிலும் ‘மீ ரூ’ இயக்கம் தொடங்கப்பட்டு, பல பிரபலங்கள் பாலியல் கொடுமைகள் குறித்து டருவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்தநிலையில் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்ச் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே மேனகா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியல், ஊடகங்கள், நிறுவனங் கள் போன்ற பல துறைகளில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர் கள் மீது பாலியல் முறைப்பாடுகள் வருவதாக தெரிவித்த அவர் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் கேலி மற்றும் தனது நடத்தை பற்றி சந்தேகம் ஏற்படும் என்பதால் இதுபற்றி வெளியே சொல்ல பயந்த பெண்கள் இப்போது துணிச்சலாக பேசுகின்றனர். பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசும்போது, அந்தக் குற்றச்சாட்டு யார் மீதாக இருந்தாலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு குற்றச்சாட்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்:மென மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.