Home இலங்கை ஹம்பாந்தோட்டையில் சீன கடற்படை தளம் – மைக் பென்ஸின் குற்றச்சாட்டை நிராகரித்தார் ரணில்…

ஹம்பாந்தோட்டையில் சீன கடற்படை தளம் – மைக் பென்ஸின் குற்றச்சாட்டை நிராகரித்தார் ரணில்…

by admin

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் எனும் கருத்தினை நிராகரித்துள்ள இலங்கை இது தொடர்பில் அமெரிக்காவுக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் எனவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடையிலான வர்த்தக முயற்சி எனவும் இலங்கையில் சீனாவின் கடற்படை தளங்கள் இல்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படையின் தென்பகுதிக்கான தலைமைப்பீடத்தை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை கருதியே அங்கு மாற்றியுள்ளதாகவும் இந்த விடயங்கள் குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் இலங்கை இராணுவத்தினர் துறைமுகத்திற்கு அருகில் நிலை கொண்டுள்ளனர் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அமெரிக்க துணைஜனாதிபதி மைக் பென்ஸ் இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாவதற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் வழிகோலும் என கடந்தவாரம் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More