தன்சானியாவில் பெரும் பணக்காரரான முகமது டியூஜி என்பவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவிலேயே இளம் கோடீஸ்வரர் எனத் தெரிவிக்கப்படும் கூறப்பட்ட 43 வயதான முகமது டியூஜி தன்சானியாவின் முக்கிய நகரமான டர் எஸ் சலாமில் வைத்து கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முகமது டியூஜ எதற்காக கடத்தப்பட்டார் என்பது தெரியவில்லை எனவும் இது தொடர்பாக 2 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியல் டொலர்கள் என குறிப்பிட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, தன்சானியாவின் ஒரே கோடீஸ்வரர் இவர்தான் என விவரித்துள்ளது.
தனது பரம்பரை தொழிலான சில்லறை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார் எனவும் விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆபிரிக்கா முழுவதிலும் இவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.