இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இது குறித்து பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தாம் தலையிட விரும்புவதாகவும், மக்களை காப்பாற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இடைக்கால அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் மற்றைய தரப்பிலிருந்து இடைக்கால அரசாங்கம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டால் அரசியல் கட்சி என்ற தாம் தீர்மானிக்க தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.