Home இலங்கையாழ் சென்றுள்ள தமிழக துறைசார் நிபுணர் குழு, திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி…

யாழ் சென்றுள்ள தமிழக துறைசார் நிபுணர் குழு, திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி…

by admin


யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனுக்கு மரியாதை செலுத்தி தங்களுடைய அஞ்சலிகளைச் செலுத்தியிருப்பதாக தெரிவித்த தமிழக குழுவினர், . இந்த மண்ணுக்கு கலாச்சார ரீதியான பயணமாக தாம் வந்திருந்தாலும் திலீபனுடைய நினைவிடத்திற்கு வந்டைதிருப்பதும், உணர்வை வெளிப்படுத்துவதும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்களுடைய நீண்ட கால உறவையும் வெளிப்படுத்துவதாகவும், அமைதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு பயணம்ம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர். இந் நிலையிலேயே இந்தக் குழுவினர் திலீபனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இக்குழுவில் தமிழ்நாடு – சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்ப்ட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More