இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கை முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் பீற்றர் தொம்சன் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் – எமது எதிர்காலத்தை வரையறுத்தல் எனும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்வேறு வளங்கள் நிறைந்த இந்து சமுத்திரப் பிராந்தியம் தற்போது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது எனத் தெரிவித்த அவர் அதனைப் பாதுகாக்க பொறுப்பு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
வெறுமனே வார்த்தைகளால் பேசிக் கொடிருக்காமல் செயற்பாடுகளால் பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.