ஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 வயதுச் சிறுவன் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள பல்டா இன் ஹெஸ்சே நகரிலேயே இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து அருகே மக்கள் குழுமியிருந்த இடத்தில் விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் எனவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.