ஏமனில் நடைபெறும் உள் நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தை நோக்கி தள்ளப்படக் கூடும் என ஐ. நா. அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. இந்த உள் நாட்டுப் போர் காரணமாக கடினமான பொருளாதார நெருக்கடி நிலவுகினற்து எனவும் இந்த நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் 3 லட்சம் பேர் பஞ்சத்திற்கு தள்ளப்படும் நிலைமை உண்டாகும் எனவும் அதனை தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என ஐ. நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் லட்சக்கணக்கான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருவதாகவும் அண்மையில் அங்கு ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு காரணமாகவும் ஏமனில் உணவில்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளதாக சேவ் த சில்ட்ரன் தனியார் தொண்டு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏமனில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன் அவர்களில் 5,000 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது