Home இந்தியாஓடிசாவில் ஏற்பட்ட டிட்லி புயல் – வெள்ளத்தினால் 57 பேர் பலி :

ஓடிசாவில் ஏற்பட்ட டிட்லி புயல் – வெள்ளத்தினால் 57 பேர் பலி :

by admin

ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் திகதிகரையைக் கடந்தனையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

வீதிகளில்  மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டிருந்தது.இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வெள்ளத்தினால் சுமார் 2,765 கோடி ரூபாய் பெறுமிதயான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More