Home இலங்கைபுத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நண்பர்கள் கைது…

புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நண்பர்கள் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

 


புத்தளத்திலிருந்து சென்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் இளைஞரும் அவரது சகாவும் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனையால் நண்பர்களாகினர். குடு பாவனைக்காக வழிப்பறியில் ஈடுப்பட்டனர் என காவற்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில் அண்மைய நாள்களில் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றன. வீதியால் சென்ற பெண்களிடம் நகைகள் மற்றும் கைப்பைகள் பறிக்கப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், சந்தேகநபர்கள் இருவரை நேற்று (18.10.18) வியாழக்கிழமை கைது செய்தனர்.

அத்துடன் கொள்ளையிடப்பட்ட நகைகளை சந்தேகநபர்கள் நகைக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர். அவை உருக்கப்பட்ட நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டன. அதனுடன் பெண் ஒருவரின் கைப்பையும் சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்டது. அதற்குள்ளிலிருந்து வெளிநாட்டு நாணயத்தாளும் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More