இலங்கையின் ஊடகப்பரப்பில் கூடிய நெருக்கடிகளையும் மரணங்களையும் கடந்த தசாப்த காலத்தில் எதிர்கொண்ட தரப்பாக தமிழ் ஊடகத்தரப்பே இருந்துவந்துள்ளது. ஆனாலும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத அரசாக இலங்கை இருந்து வருகின்ற நிலையில் மீண்டும் தலைதூக்கி வருகின்ற ஊடக சுதந்திரத்திற்கெதிரான அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றது. 2000ம் ஆண்டில் பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்பின் மீதான ஊடகப்படுகொலை கலாச்சாரம் 39 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களை காவு கொண்டு நிற்கின்றது. அதேவேளை நூற்றுக்கணக்கிலான ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியிலிருந்து விலகவும் நாட்டை விட்டு வெளியேறவும் இத்தகைய சூழலே காரணமாகியிருந்தது. ஆனாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு கூட நீதி வழங்கப்படாத வரலாற்றைக் இலங்கை இன்று வரை கொண்டுள்ளது. நாட்டின் வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஒரு சிலவே. அவற்றிள் கிடப்பில் போடப்பட்டுள்ள தர்மரத்னம் சிவராம் கொலை தொடர்பான வழக்கு ஒன்றாகும். நிமலராஜன் கொலை தொடர்பிலான வழக்கும்; கடந்த மாதத்துடன் ஒரேயடியாக இழுத்து மூடப்;பட்டுள்ளது. நடந்தேறிய ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையிலான விசாரணை என்பது முக்கிய கோரிக்கையாக யாழ்.ஊடக அமையத்தால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகி;ன்றது. இந்நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் மீண்டும் மோசமடைந்துவரும் ஊடக சுதந்திரம் அச்சத்தை தருகின்றது. தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் பௌத்த மயமாக்கல், ஆக்கிரமிப்புக்கள், இராணுவ மயமாக்கல், மனித உரிமை மீறல்கள், காரணமற்ற கைதுகள்,ஊழல் மோசடிகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிப்பு உள்ளிட்டவை தொடர்பிலான செய்திகள் வெளியே வருவதை முடக்க மீண்டும் முனைப்பு காட்டப்பட்டுவருகின்றது. முறைசாரா விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் ஊடக நடவடிக்கைகள் மற்றும் தகவல் மூலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவருகின்றமை ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே. அரச அதிகாரத்தின் வெவ்வேறு வடிவங்களும் இத்தகைய அச்சமூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. அவ்வகையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது,காரணம் தெரிவிக்கப்படாது சிறை ,நாலாம் மாடி விசாரணை மற்றும் இரகசிய விசாரணையென அச்சுறுத்துவதன் ஊடாக ஊடகவியலாளர்களை முடக்க மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. முன்னதாக சமூக ஊடக பதிவுகளிற்காக கைதானவர்கள் பிணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்க மரணதண்டனை கைதிகள் பொதுமன்னிப்பில் வீடு திரும்பும் கதைகள் இலங்கையில் சாதாரணமாகியுள்ளது. …
Tag:
ஊடகப்படுகொலை
-
-
திருமலையில் வைத்து 2016ம் ஆண்டு படுகொலையான சக ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட…
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கடந்த…