மேதகு ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி செயலகம், கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வடக்குமாகாணசபையின் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாண மீன்பிடிவிவகாரங்களுக்கான அமைச்சர் என்ற வகையில் எனது மாவட்டமும், அதன்கரையோர மக்களும் அனுபவிக்கும் கஷ்டங்களை தங்களது மேலானதும்,அவசரமானதுமான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த நாட்டின் அரச தலைவர் எனும் அதிகாரத்துக்கும் அப்பால் சுற்றாடல்பாதுகாப்புக்கும் பொறுப்பானவர் என்ற காரணத்தாலும் பல்வேறுநெருக்குவாரங்களுக்கு மத்தியிலும்கூட சூழல் பாதுகாப்பில் தாங்கள்கடைப்பிடிக்கும் உறுதியான நடைமுறைகளைக் கருத்திற் கொண்டும்முக்கியமான விடயங்களை தங்களின் கவனத்திற்கு தருகிறேன். நான் முன்வைக்கும் விடயங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரியதுமட்டுமல்லாது பல கரையோர மாவட்டங்களில், குறிப்பாக யுத்தகெடுபிடிகளால் அரச நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருந்த அனைத்துமாவட்டங்களிலும் இவ்வாறான அவசரமான தீர்வு காணவேண்டிய விடயங்கள்இருக்கும் எனவும் நம்புகிறேன். அண்மைக்காலமாக, குறிப்பாக யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்பு,மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது கரைவலைத் தொழிலுக்கு உழவுஇயந்திரங்களைப் பயன்படுத்துவதை பரவலாகக் காணமுடிகிறது. …
Tag: