ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள்பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று முற்பகல் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் நலன் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை உடனடியாக விடுவித்து மக்களின் ,யல்பு வாழ்க்கைக்கு வழி வகுக்கவேண்டும் என முதலமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார் எனவும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவரான முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்துடன் புதிய அரசியல் திருத்தின் ஊடாக சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதுவரை காலமும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் இருந்த இழுத்தடிப்பு நிறுத்தப்பட்டு உடனடியாக எவ்வித பேச்சுவார்த்தைகளுமின்றி மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்கள் முழமையாக வழங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Add Comment