உலகம் பிரதான செய்திகள்

ஹெய்ட்டி சிறையொன்றிலிருந்து 170 கைதிகள் தப்பியோட்டம்

heity
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஹெய்ட்டியின் யுசஉயாயநை நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து 170 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதுடன் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான  மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ள கைதிகள் சில துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் இந்த மோதல் சம்பவத்தில் சிலர் கயாமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கைதிகள் சிறைச்சாலையில் கைதிகள் அணியும் ஆடை அணிந்திருக்கவில்லை எனவும், இவர்கள் இலகுவில் மக்களுடன் கலந்திருப்பார்கள் எனவும் அவர்களை கண்டு பிடித்து கைது செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் ஹெய்ட்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது. கைதிகளை சுற்றி வளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.