குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை யார் கொலை செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
லசந்த கொலை குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ள அவர் அவ்வாறு தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டால் யார் கொலையாளி என்ற அடையாளத்தை வெளிப்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்து கொள்ளாது இவ்வாறு குற்றம் சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ள மகிந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் லசந்த கொலை குறித்து விசாரணை நடத்தினால் உரிய பதிலளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment