Home இலங்கை விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமரும் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார் – ஞானசார தேரர்

விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமரும் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார் – ஞானசார தேரர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்திற்கு சார்பான ஓர் தலைவராகவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது என  தெரிவித்துள்ள அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் முக்கிய நிறுவனங்களுக்கான உயர் பதவிகளில் சிங்களவர் அல்லாத, பௌத்தர் அல்லாhதவர்களை நியமித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன்  நாட்டில் குடியுரிமை இல்லாதவர்களையும் முக்கிய நிறுவனங்களில்  உயர் பதவியில் அமர்த்தியுள்ளதாகவும் ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.