குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஒன்பது சந்தேகநபர்களை மேலும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைப்பதற்கு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதேவேளை கடந்த 2ம் திகதி குறித்த வழங்கின் பத்தாவது சந்தேக நபரை ஏப்பிரல் மாதம் 3ம் திகதி வரையில் விளக்க மறியில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கி இருந்தார்.
அத்துடன் குறித்த வழக்கின் விசாரணைகள் முடிவுறும் நிலையில் உள்ளது எனவும் மிக விரைவில் குற்ற பகிர்வு பத்திரம் நீதிமன்றில் தாக்கல் செய்யபப்டும் எனவும் நீதிபதி தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comment