இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – சம்பந்தன்


அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நிலையான சமாதானத்தை நிலைநாட்டக்கூடிய மெய்யான தீர்வுத் திட்டமாக அரசியல் சாசனத் திருத்தங்கள் அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடியே நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரத்தின் பின்னரே நாட்டில் இனவாதம் தலைதூக்கியது எனவும் மீண்டும் நாட்டில் யுத்தம் இடம்பெறாத வகையில் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.