நிதி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார். நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி பிரசூரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தமது பெயர் பிழையாக உள்ளடக்கப்பட்டுள்ளது என மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட காலப் பகுதியில் தாம் நிதி அமைச்சராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ கடமையாற்றவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது பெயரைப் பயன்படுத்தி தமக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Add Comment