விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு நாடாளுமன்ற செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விமல் வீரவன்சவினால் முன்வைக்கப்பட்ட மனுவை இன்று விசாரித்த நீதிபதிஇந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் குறித்த மனு எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வாகன முறைகேடு தொடர்பில் முன்னாள் அமைச்சரான விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment