இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

யாழில் பென்ஷனுக்கு தடை போடும் அதிகாரி; ( காதோடு காதாக) அராலியூர் குமாரசாமி

‘சங்கு ஊதி கடவுளுக்கு பூசையும் நடக்கும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். சங்கானது வாழ்வுக்கும் இறப்புக்கும் தனது பங்களிப்பைச் செய்து சிறப்படைகிறது’. என்று  யாழ்.வலிகாமப் பகுதி ஒன்றில் இயங்கும் பிரதேச அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் எனது நண்பன் அக்கம் பக்கம் பார்த்தவாறு தத்துவம் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லையே யாருக்கு இந்த தத்துவத்தை சொல்கிறான் என்று கேட்பதற்காக அவன் பக்கம் சென்று ‘என்ன சொல்லுகிறாய்’; என்று கேட்டேன். அவனோ ‘சங்கானது மனிதனின் வாழ்வுக்கும் இறப்புக்கும் பயன்படுவது போல் இந்த அலுவலகம் தனது பணியைச் சரிவரச் செய்யுமா?’ என்று கேள்வி கேட்டவாறே வந்தான்’.

இந்த அலுவலகத்தில் சாரதியாக பணியாற்றி 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுச் சென்ற கொக்குவிலைச் சேர்ந்த ஒருவருக்கு இன்னும் பென்ஷன் கிடைக்கவில்லை. பென்ஷன் கிடைக்கவில்லை என்பதை விட இவர் பென்ஷன் எடுப்பதற்கு இந்த அலுவலகம் விரும்பவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. என்னவோ தெரியாது இவர் இது சம்பந்தமாக இந்த அலுவலகத்துக்கு செல்லும் போது இவரைப் பார்த்ததும் இதற்கு பொறுப்பானவர் ‘உங்களின் பயிலை அதிகாரியின் மேசையில் வைத்து விட்டோம் அவர் தான் கையெழுத்து போட வேண்டும். போட்டதும் கொழும்புக்கு அனுப்புகிறோம் நீங்கள் அடிக்கடி வந்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று சொன்னார்.

பாவம் இவரால் என்ன செய்ய முடியும் ‘அதிகாரி எப்ப வருவார் கையெழுத்து எப்ப போடுவார்’ என்று கேட்டுள்ளார். அவ்வளவு தான் ‘அதிகாரி வந்ததும் முதலில் உம்மட பயிலைத் தான் பார்ப்பார் என்று நினைத்தியலா அவருக்கு பல வேலைகள் இருக்கு முடிந்தால் தான் உம்மட பயிலைப் பார்ப்பார்’ என்றார். இவரும் விட்டபாடில்லை. ‘அதிகாரிக்கு எப்ப வேலை முடியும்’ என்று கேட்டார். அதற்கு அவரோ ‘வேலை எப்ப முடியும் என்று உமக்கு சொல்ல வேண்டுமா?’ என்றார். ‘இல்லை….இல்லை வேலை முடியும் போது நான் வந்து பார்க்கலாம் என்று தான் கேட்டேன்’. என்றார். ‘வேலை முடியும் போது உமக்கு அறிவிக்கிறம் அப்ப வந்து பாரும் இப்ப போட்டு வாரும்’ என்று அவரை ஒரு பார்வை பார்த்து வழியனுப்பினார் பொறுப்பானவர். இன்று வரை பென்ஷன் அலுவலாக இந்த அலுவலகத்துக்குப் போகப் பயப்படுகிறார். அதனால் 6 வருடங்கள் ஓடி விட்டன.

இவர் மட்டுமல்ல வேலையில் இருந்து ஓய்வுபெறும் பலர் பென்ஷன் எடுக்க முடியாமல் கஷ்ரப்படுகின்றனர். மாளிகாவத்தையில் பென்ஷன் அலுவலகம் இருக்கிறது. அங்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் எவ்வளவு மரியாதையாக வரவேற்று பதிவுகளை மேற்கொள்வர். காலதாமதம் ஏற்படுவதற்கு பணிபுரிந்த அலுவலகம் தான் காரணமாகும். அதாவது பணியாளர் ஒருவர் வேலை செய்யும் போது அவரது முழுமையான விபரங்களை அலுவலகம் பதிந்து வைத்திருப்பதில்லை. பென்ஷன் அலுவலகம் சம்பந்தப்பட்ட அலுவலகங்களிடம் பணியாளர் சம்பந்தமான தரவுகளைக் கேட்கும் போது பதிவுகள் இல்லாத காரணத்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்காமலே போய்விடுகிறது. இதற்கான முழுப் பொறுப்பையும் அலுவலகங்கள் தான் ஏற்க வேண்டும். தமது வேலையை செய்யாமல் விட்டுவிட்டு பென்ஷன் பதிவுகளை மேற்கொள்ள வரும் ஓய்வுபெற்ற பணியாளர்களிடம் முறைகேடாக நடந்து கொள்ள முடியாது.

மதியச் சாப்பாட்டுக்கு சொதி என்றால் சுவையாக இருக்கும். அதனால் மதியச் சாப்பாட்டில் சொதி கலக்காத வீடுகள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் சொதியை சாப்பாட்டில் அளவாக கலக்க வேண்டும் சுவையாக இருக்கிறது என்று அளவுக்கு அதிகமாக கலந்தால் வயிற்றாலை அடிக்கும் பாருங்கோ. அதே போல அலுவலகத்தை நிர்வகிப்பதற்கு உகந்த திறமையான பண்பான ஒருவரை அதிகாரியாக நியமனம் செய்ய வேண்டும் இல்லாது போனால் அவ்வளவு தான் அலுவலகம் முடங்கிப்போய் விடும். இதே பேரை ஒத்திருந்தும் தகுதி இல்லாத அதிகாரி இந்த அலுவலகத்தில் இருப்பதால் தான் பலர் இவரால் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த அலுவலக அதிகாரி தனது வேலையைச் செய்கிறாரோ இல்லையோ தனது சுகபோகங்களுக்கான வேலையைச் சரியாகச் செய்கிறார். இதற்கு இடையூறாக எவர் வந்தாலும் அவர்களுக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டார். நல்லது கெட்டது கேட்கக் கூடாது. இந்த அலுவலகத்தில் வேலை செய்த அலுவலக உதவியாளர் ஒருவர் நல்லது கெட்டது கேட்டதால் இடமாற்றப்பட்டார். ஆனால் இவர் இடமாற்றம் பெற்றுச் சென்றது நல்லது கெட்டது கேட்டதால் தான் என்பது அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் என்ன செய்ய முடியும். களவு செய்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டை இவர் மீது போட்டு இவரை காரைநகரில் உள்ள பிரதேச அலுவலகத்துக்கு இடமாற்றி இருக்கிறார்கள். செய்யாத குற்றச்சாட்டுக்கு இடமாற்றம் வழங்கினால் ஏனைய பணியாளர்கள் வாயை மூடிக் கொண்டு தான் இருப்பார்கள்.

அலுவலக படங்கு ஒன்றைத் திருடினார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது போடப்பட்டுள்ளது. அலுவலக வாகனத்தில் தான் படங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அலுவலக பொருள் ஒன்றை எடுப்பதென்றால் கொப்பியில் கையெழுத்து வாங்கிய பின்னர் தான் அந்தப் பொருளை சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டவரிடம் ஒப்படைப்பினம் ஆனால் இந்த நடைமுறை இடம்பெறாதவிடத்து வாகனத்திற்குள் எப்படி படங்கு வந்தது. இவரை இடமாற்றுவதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியாகும். அலுவலகத்தில் மூக்கை நுழைத்து நல்லது கெட்டதைக் கேட்டதால் வந்த வினை. என்ன நடந்தாலும் பேசாமல் இருந்திருக்கலாம் என்று இந்த அரச அலுவலகத்தில் பணியாற்றும் ஏனைய பணியாளர்கள் இவருக்கு அறிவுரை சொல்லி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தான் மேலதிகாரியின் மிரட்டலால் அவரின் கீழ் பணியாற்றும் 3 பணியாளர்கள் மயங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் பணியாளர்கள் இந்த அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும் முன் ‘சொற்றினை வேதியன் சோதி வானவன்’ என்று தேவாரம் பாடிவிட்டுத்ததான் செல்கின்றனர்.

மேலும் இந்த அதிகாரியின் வேலைக்கு வழங்கிய அரச வாகனத்தை தனது வீட்டில் தான் கொண்டு போய் விடுகிறார். வாகன சாரதியோ 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் வந்து கையெழுத்து வைத்து விட்டு மீண்டும் இந்த அதிகாரியின் வீட்டுக்குச் சென்று வாகனத்தை எடுத்து இவரை ஏற்றிக் கொண்டு அலுவலகம் வருகிறார். தனது அலுவலக எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில்  இருந்து 6 கிலோ மீற்றர் தூரம் தான் வெளியே செல்ல முடியும். இவர் அதனையும் கடந்து வாகனத்தை தனது தனிப்பட்ட தேவைக்கு கொண்டு செல்கிறார். இவரால் இந்தப் பிரதேசம் பின்தங்கிச் செல்கிறது.

வெறும் சோற்றையும் சாப்பிட முடியாது வெறும் சொதியையும் குடிக்கவும் முடியாது. இரண்டையும் சேர்த்தால் தான் சாப்பிட முடியும். இதேபோல் இந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தால் இந்தப் பிரதேசம் முன்னேறும் பாருங்கோ. இந்த அலுவலகம் சொந்த வீடல்ல அதிகாரி கொண்டாட பொதுவான இடம் ஆனபடியால் இந்த அலுவலகத்துக்குள் மட்டுமல்ல எல்லா அலுவலகத்துக்குள்ளும்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.