பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
பி.எம்.ஜி. தீவின் தென்பகுதியில் உள்ள லயே என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2100 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comment