முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலை தொடர்பான வழக்கில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மாலபே மருத்துவ கல்லூரியிலிருந்து பெறப்பட்ட உடற்பாகங்கள் தொடர்பிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கொலை நடந்த காலப்பகுதி தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தாஜூடினின் வாகனத்தை பினதொடர்ந்த வாகனங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றில் அறிவித்ததனைத் தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment