இலங்கை

உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியும் – ஜனாதிபதி


புதிய உள்ளூராட்சி சபை தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி உள்ளூராட்சி சபை தேர்தல்களை இவ்வருடத்திற்குள் நடத்த முடியுமென தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  இன்று  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற தேர்தல் வாக்காளர்களை தெளிவூட்டுவதற்காக  ஆரம்பித்த அறிவூட்டல் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முறை அன்று உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் ஆணைக்குழு தனது கடமைகளை சரிவர மேற்கொள்ளாதமையின் பெறுபேறுகளையே இன்று நாம் அனுபவிக்கிறோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்த தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் செயற்பாடுகள் பக்கச்சார்பின்றியும், சுயாதீனமாகவும் நடைபெறாமையே உள்ளூராட்சி சபை தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான பிரதான காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply