இலங்கை

தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா-

யாழ். சுழிபுரம், தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் பத்தாவது ஆண்டு பூர்த்தி விழா இன்று 08.04.2017 சனிக்கிழமை பிற்பகல் 3.30மணிளவில் சிவபூமி முதியோர் இல்ல பாலச்சந்திரன் மண்டபத்தில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை) அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு. திருமதி கந்தையா நீலகண்டன் (அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்) தம்பதிகளும், சிறப்பு விருந்தினர்களாக திரு. நா.வேதநாயகன் தம்பதிகள் (அரச அதிபர், யாழ் மாவட்டம்), திரு. வை.ஈழலிங்கம் தம்பதிகள் (இளைப்பாறிய கணக்காளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு,இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை அவைத்தலைவர் திரு. சீ.வி.கே சிவஞானம் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக சிவபூமி ஞான வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் திருமுறை வழிபாடு, வரவேற்புரை என்பன இடம்பெற்று, சைவப் பெரியார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து தரிசனம் ஆவண ஒளிநாடா மற்றும் சிவபூமி நிழல் சிறப்பு மலர் என்பன வெளியிட்டு வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.