இலங்கை பிரதான செய்திகள்

வீதி விபத்தில் இறந்தவரின் இறுதி நிகழ்வுக்கு சென்ற வான் தடம் புரண்டதில் யுவதி மரணம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை அரச பேரூந்தும் சிறிய ரக உந்துருளியும் விபத்திற்குள்ளாகியதில் பலியானவரின் இறுதி நிகழ்வுக்குச் சென்றுகொண்டிருந்த மகேந்திரா ரக வான் தடம் புரண்டதில் யுவதி ஒருவர் பலியாகியுள்ளார்.  இன்று 11-04-2017 பிற்பகல் கிளிநொச்சி  கனகபுரம் சேவியர் கடைச்சந்திக்கருகில் இடம்பெற்ற இவ் விபத்தில் திருநகர் தெற்கைச் சேர்ந்த விஜிதா வயது 22 என்னும் யுவதியே பலியாகியுள்ளார்.

குறித்த வாகனத்தில் எட்டுப்பேர் பயணித்துள்ளனர். வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில்  படுகாயமடைந்த குறித்த யுவதி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனளிக்காத நிலையில்  மரணமடைந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிசை பெற்று வருகின்றனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.