யாழ். சுன்னாகம் சந்தியில் இன்றையதினம் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரை காவல்துறையினர் மறித்த போது அவர்கள் நிற்காமல் சென்றதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்ற வேளை எதிரே வந்த வானுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதனால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Spread the love
Add Comment