இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோருடன் சென்று கொண்டிருந்த படகு அதிகப்படியான வெள்ளம் காரணமாக ஆற்றில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் நீரில் நீந்தி கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பாக படகின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் அதிகப்படியான மக்களும், இருசக்கர வாகனம் உட்பட பல்வேறு பொருட்களும் ஏற்றப்பட்டு இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment