இலங்கை

மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – கருணா

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் இனவாத கட்சிகளை விரட்டியடிக்கவே தாம் புதிய கட்சியை ஆரம்பித்ததாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே அதிக அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அது போன்ற அபிவிருத்தித்திட்டங்களை உலகில் எந்த தலைவரும் முன்னெடுக்கவில்லை எனவும் கருணா மேலும் தெரிவித்தார்.

மேலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார் என்றும், அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • All know how Mahinda,killed thousands of innocent tamils,you traitor leave away the tamils and allow them to live in peace.You and Chandrakanthan chased away the Jaffna tamils from Batticaloa,thus paved the way for the muslims to occupy and buy lot of business establisments in Batticaloa.We tamils in Batticaloa want our brothers and sisters from Jaffna and hill countries to come and settle down in the east.