Home இலங்கைவடமாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் ஆளுநரை சந்தித்தார்!

வடமாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் ஆளுநரை சந்தித்தார்!

by admin

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்ற புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் செயலகத்திற்கு சென்று ஆளுநரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் போது ஆளுநர், கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்களை கூறினார். அத்துடன் நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என தெரிவித்த ஆளுநர், இந்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதாரசேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, ஆளுநர் ஆலோசனைகளை வழங்கினார்.

அதேவேளை புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவனையும் சந்தித்து கலந்துரையாடினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More