இலங்கை பிரதான செய்திகள்

அதிகாரப் பகிர்வில்லாத அரசியல் தீர்வு உப்பில்லாத பண்டத்தைப் போலாகும் – கிழக்கு முதலமைச்சர்


மாகாண சபைகளுக்கான  அதிகாரங்களை  வழங்கும் நடவடிக்கை  துரிதப்படுத்தப்படுவதன் ஊடாக மாத்திரமே  சிறுபான்மையினரின் எஞ்சியுள்ள காணிகளையாவது பாதுகாக்க முடியும்  என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.

சிறுபான்மையினர் செறிந்து  வாழும் பகுதிகளில்  உள்ள காணிகளில் பேரினவாதிகள் அத்துமீறும் நடவடிக்கைகளை  ஆரம்பித்துள்ளமை  சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்த பல்வேறுகேள்விகளை  எழுப்பியுள்ளதெனவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு  மாகாண முதலமைச்சர்இதனைக் கூறினார்.

மறைந்த  ஜனாதிபதி ரணசிங்க  பிரேமதாசவின் நினைவுதின நிகழ்வின்போது  அதிகாரப் பகிர்வு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நம்பிக்கையான  கருத்துக்களை வெ ளியிட்டிருந்தார் எனவும்  அதேபோன்று ஜனாதிபதியும் அதிகாரப் பகிர்வு குறித்து சாதகமாக கருத்துக்களை  தெ ரிவித்து வருகின்றார் எனவும் தெரிவித்த அவர்   இந்த ஜனாதிபதி  மற்றும் பிரதமருடைய ஆட்சி   காலத்தில்  சிறுபான்மையினருக்கான தீர்வனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்   பிரதான சிறுபான்மைக்கட்சிகளான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ மற்றும் தமிழ்த்தேசியக் கூட்மைப்பு ஆகியன உறுதியாக உள்ளன எனவும் தெரிவித்தார்.

காணி,பொலிஸ் மற்றும் நிதியதிகாரஙகள் விரைவில்   மாகாணங்களுக்கு  வழங்கப்படவேண்டும்  என்பதுடன்  அதனூடாக மாத்திமே இன்று சிறுபான்மை  சமூகங்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத  செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

மேலும் கிழக்கில் காணி ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல் விவகாரங்களில் அரச அதிகாரிகள் பக்கசார்பாக  நடந்துகொள்வதாக ஒரு குற்றச்சாட்டு பகிரங்கமாக முனவைக்கப்படுகின்றது.ஆனால் எம்மிடம் முழமையான அதிகாரம்  இல்லாத போது  கூட மாயக்கல்லி விவகாரத்தில் மாகாண சபையின் தீர்மானத்தை  எந்த  அதிகாரியும்கேள்விக்குட்படுத்த முடியாது என்பதை மிக திட்டவட்டமாக அறிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் பலவேறுபட்ட காரணிகளால் எமது மக்கள் காணிகளை  இழந்துள்ளார்கள் ,அவற்றையெல்லாம் மீட்டுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு  இருக்கின்றது.

அதனால் தான்  அதிகாரப் பகிர்வுசெயற்பாட்டை  துரிதப்படுத்துமாறு  நாம் அரசாங்கத்தை  கேட்கின்றோம்.இதற்கு  மக்கள் கருத்திறியும்  நடவடிக்கை  அவசியமில்லை என நான்  எண்ணுகின்றேன். ஏனெனில் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள 13 ஆவ திருத்த்த்தை அமுல்ப்படுத்த மக்கள் கருத்தறியும் நடவடிக்கை சட்டரீதியாகதேவையற்றது,

அது மட்டுமல்லாமல்  அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாத   அரசியல் தீர்வு என்பது உப்பில்லாப் பண்டத்தைப்போலாகும்,

வடக்கும் கிழக்கும் மாத்திரம் 13ஆவது  திருத்த்த்தை அமுல்ப்படுத்துமாறுகோரவில்லை  ஏனைய  7 மாகாணங்களை சேர்ந்த முதலமைச்சர்களும் இந்தக் கருத்தில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்,

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.