நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எனினும் அத்திவாரம் அமைக்கும் பணிகளைத் தொடரலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்டப்படும் இடத்தில் 33 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் சார்பில் ;ஸ்ரீரங்கன் என்பவர் காவல்நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய அதுதொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசிhரித்த நீதிபதிகள் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியதுடன் நடிகர் சங்கத்தை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் இன்றையதினம் குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்றவேளையில் நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்ததுள்ளது.
Spread the love
Add Comment