ரஸ்ய தேவாலயமொன்றில் போக்கிமேன் கோ விளையாடிய இணைய வலைப்பதிவாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இணைய வலைப்பதிவாளர் போக்கிமேன் கோ விளையாடுவதனை காணொளியாக பதிவிட்டு இணையத்தில் தரவேற்றியிருந்தார்.
தேவாலயமொன்றிற்குள் இவ்வாறு விளையாடியமைக்காக மூன்றரை ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 22 வயதான சொக்கோலவோஸ்கி (Sokolovsky )க்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத நம்பிக்கைகள் விடயங்களை அவமரியாதை செய்தார் என லவோஸ்கி மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
Spread the love
Add Comment