டுவிட் பதிவு ஒன்று காரணமாக தென் ஆபிரிக்க அரசியல்வாதி ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. காலணித்துவம் குறித்த தகவல்களை வெளியிட்டதாக தென் ஆபிரிக்க அரசியல்வாதி ஹெலன் ஷில்லி (Helen Zille ) என்பவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலணித்துவ ஆட்சி முறைமை சில நன்மைகளை தரும் என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்த பதிவு காரணமாக அவரது கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஹெலன் ஷில்லி வெள்ளையினப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு தரப்பினரும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add Comment