மொசூலில் தப்பிச் சென்ற 230 பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கிய பொதுமக்களை இவ்வாறு கொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவத்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் குறைந்தபட்சம் 204 பொதுமக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அதிகளவான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Add Comment