பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் நேற்று பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில் போராட்டம் காரணமாக தபால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சேவைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதுடன் குறித்த போராட்டம் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூட்டப்பட்டு உள்ளது. காரணத்தை சிங்கள மொழி மூலம் போடப்பட்டிருப்பதால் மக்கள் காரணம் தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளார்கள்.நாட்டில் தபால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment