இலங்கை

அசாத் சாலிக்கு எதிராக புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் இந்த முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் இளைஞர் உரிமைகள் செயலாளர் சுகீஸ்வர பண்டார இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியனவற்றினை மீறும் வகையில் அசாத் சாலி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாத் சாலி, அண்மையில் பௌத்த பிக்குகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

பொறுப்புணர்ச்சியற்ற வகையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply