குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய லொத்தர் சபையின் கொவி செத்த சீட்டிழுப்பு தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியிருந்தார்.
எனவே இந்த சம்பவம் தொடர்பில் பந்துல குணவர்தனவிடம் முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மோசடி இடம்பெற்றிரு
ந்தால் அது குறித்து பந்துல குணவர்தன புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையென்றால், பந்துல குணவர்தனவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment