குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரூ விமான நிலையத்தில் மூன்றாவது ஓடு பாதை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
செல்வந்த வர்த்தகர் ஒருவர் இது குறித்த யோசனையை முன்மொழிந்துள்ளார். ஹோட்டல் துறையில் முன்னணி வகிக்கும் Surinder Arora என்ற வர்த்தகரே இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
குறைந்த செலவில் மூன்றாவது விமான ஓடுபாதை அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய ஓடுபாதை அமைப்பதற்கு 17.5 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love
Add Comment