குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில வகை போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது. வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய பேரவை இது குறித்து அறிவித்துள்ளது. இதனை வீதிப் போக்குவரத்து குறித்த தேசிய பேரவையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
மது போதையில் வாகனம் செலுத்துவோர், காப்புறுதியின்றி வாகனம் செலுத்துவோர், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் வயதை பூர்த்தி செய்யாது வாகனம் செலுத்துவோர் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவோர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபா அபராதம் விதிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Add Comment