உலகம் பிரதான செய்திகள்

புயல் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரில் ஊடரங்கு உத்தரவு

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகப் பகுதி  கடும் புயல் வெள்ளம் போன்ற  இந்த அனர்த்தங்களினால் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ள நிலையில்  அங்கு இடம்பெறும் திருட்டுக்களை தடுப்பதற்காக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன நிலையில் அங்கு வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும்,  ; வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுபெறுவதாக தெரிவித்து இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில்   நள்ளிரவு 12 மணி முதல் காலை10  மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நிவாரண பணிகளுக்கு உதவுபவர்கள், முதலுதவி அளிப்பவர்கள், தொழிலுக்கு  செல்பவர்கள் மற்றும் தொழில் முடிந்து வீட்டுக்கு வருவோர் ஆகியோருக்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது

ஹூஸ்டன்  வெள்ளம் பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது

Aug 30, 2017 @ 02:52

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெக்ஸாஸின் ஹூஸ்டன் நகரம் இந்த அனர்த்தங்களினால் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது.

கடும் புயல் காற்று மற்றும் மழை வெள்ளத்தினால் இந்த அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. ஹார்வி புயல் காற்று காரணமாக ஹூஸ்டனைச் சேர்ந்த 300,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற நேரிட்டுள்ளது.

மேலும்  ஹூஸ்டனில் தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்து வருவதாகவும் இதனால் பாரியளவில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் வீதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறும் வீடுகளில் தங்கியிருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.