இலங்கை பிரதான செய்திகள்

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட பதினைந்து நாட்கள் தேவை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரணைதீவு மக்களின் காணிகளை அளவிட பதினைந்து நாட்கள் தேவை என  பூநகரி பிரதேச செயலர் கி. கிருஸ்ணேந்திரன்  தெரிவித்தார். இரணைதீவில் மக்கள் குடியிருந்த பகுதியை நில அளவீடு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலர் அடங்கிய   குழு இன்று செவ்வாய்  காலை 9 மணியளவில் இரணைமாதாநகரில் இருந்து  இரணைத்தீவுக்கு சென்று மீண்டும் பிரதேச செயலகத்தை இன்று மாலை திரும்பிய பின்     ஊடகவியலாளர்களுக்கு  கருத்து  தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கயில்

இரணைதீவு பூர்வீக காணிகளை அடையாளம் காணும் முகமாக பிரதேச செயலகத்தில் இருந்து பிரதேச செயலாளரோடு நிலஅளவை திணைக்களத்தை சேர்ந்த உத்தியோகத்தர்களோடு களவிஜயம் இடம்பெற்றிருந்தது. இந்த அளவீட்டு பணிகளுக்காக  2017 ஓகஸ்ட் மாதம் 31 ம்  திகதி  பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சர்  உடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட  முடிவிற்கு அமைவாக  பூர்வீக நிலங்களை எல்லைப்படுத்துவதர்காகவும் நில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இக் குழு சென்றிருந்தது

அப்பிரதேசத்தில்  பல இடங்களில் உள்ள எல்லைக் கற்களை அடையாளம் காணும் பணியில் எமது குழுவினர் ஈடுபட்டனர் கணிசமான  எல்லைக் கற்கள் முதற்கட்டமாக அடையாளம்  இடப்பட்டுள்ளது  இது ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களது கருத்துப்படி  ஏற்கனவே அளக்கப்பட்ட  நில அளவை வரைபடத்தில்  உள்ள கற்களை இனம்காணுவதற்கு  ஏறத்தாள பதினைந்து நாட்கள் வேலை நாட்களுக்கு மேல் செலவிட வேண்டி உள்ளது

ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவலகளை தங்களது பதிவேட்டரை தகவல்களுடன் ஒப்பிட்டு ஒரு செயற்திட்டத்தை தயாரித்த பின்னர் அதன் களப்பணியில் ஈடுபட உள்ள உத்தியோகத்தர்களுடன் அங்கு தங்கி இருந்து தொடர்ச்சியாக அளவீட்டுப் பணிகளை முடிவுறுத்த திட்டமிட்டுள்ளனர்

அதன் பினர் இவ் அறிக்கை மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்  என தெரிவித்தார்  அத்துடன் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட தகவலகளை தங்களது பதிவேட்டரை தகவல்களுடன் ஒப்பிட்டு ஒரு செயற்திட்டத்தை தயாரிக்கவும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தேவைப்படும் என மேலும் அவர்  தெரிவித்தார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers