குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் வரை பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே பதவி வகிக்கவேண்டும் என அதிகளவான பிரித்தானிய பிரஜைகள் விரும்புவது கருத்து கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. டெலிகிராவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கொன்சவேர்ட்டிவ் கட்சியின் வருடாந்த மாநாட்டின் போது பிரதமர் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்தே டெலிகிராவ் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் 57 வீதமானவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் வரை தெரேசா மே பிரதமராக பதவி வகிக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே தெரேசா மேயின் இடத்தை நிரப்புவதற்கு பொறிஸ் ஜோன்சன் பொருத்தமானவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment