இந்தியா பிரதான செய்திகள்

மன்மோகன் சிங்கை மீண்டும் பிரதமராக்கிய தமிழக அமைச்சர் சீனிவாசன்…

தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்திய பிரதமரின் பெயரை மாற்றி கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில்  திண்டுக்கல்லில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 46வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக அமைச்சர் சீனிவாசன் பிரதமர் பெயரை சொல்லும் போது மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அண்மையில் மத்திய மருத்துவக் குழு தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததை அவர் நினைவு கூர்ந்து பேசிய அமைச்சர் சீனிவாசன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்ததை கூற முற்பட்டு, பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என்று பேசியுள்ளார். இதேவேளை, அமைச்சர் சீனிவாசன் அண்மையில் பாடகி சுதா ரகுநாதனை சுதா ரங்கநாதன் என்றும் பரத நாட்டிய கலைஞர் என்றும் பேசி சர்சையில் சிக்கியிருந்தமையையும் தமிழக ஊடகங்கள் நினைவுபடுத்தியுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply