இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு விரைவில் பிரதிநிதிகள்..

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு விரைவில் பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கான ஏழு பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2ம் திகதி குறித்த அலுவலகத்துக்கான தவிசாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கான பிரதிநிதிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் அரசியலமைப்பு சபைக்கு கிடைத்துள்ளன எனவும் அவை அரசியலமைப்பு சபையினால் பரிசீலிக்கப்பட்டு, பிரதிநிதிகளை நியமிப்பதற்கான பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதற்கமைய அவர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.