171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தலைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை என டிஜிட்டல் உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்களைக் கண்டு அஞ்சியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயம் வெற்றியீட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை எதிர்நோக்க ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love